நீர் கட்டணங்களை செலுத்தாத ஆறாயிரம் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை கட்டணங்களை செலுத்தாத பாவனையாளர்களிடம் இருந்து ஆயிரத்து 650 மில்லியன் ரூபாவை அறவிட வேண்டியுள்ளதாக அந்த சபையின் கொள்முதல் பிரிவின் உதவி பொதுமுகாமையாளர் ஏகநாயக வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பல அரச நிறுவனங்கள் மத தலங்கள் பாடசாலைகள் என்பன நீர் கட்டணங்களை செலுத்த தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நீர் கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பட்டியலை செலுத்தும் பணிகள் 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.