நியூசிலாந்து கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்று உள்ளது. இரு அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது.
கேப்டன் வில்லியம்சன் 33 பந்தில் 47 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), கான்வே 29 பந்தில் 43 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), ஜிம்மி நீசம் 15 பந்தில் 33 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஓடியன் சுமித் 3 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. இதனால் அந்த அணி 13 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
புரூக்ஸ் 42 ரன்னும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) , ரொமாரியோ ஷெப்பர்டு 16 பந்தில் 31 ரன்னும் (1பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். சான்ட்னெர் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 13-ந்தேதி நடக்கிறது.