அண்டார்டிக் கண்டத்தில் பனி உருகுவது கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமின்றி ஆழ்கடல் நீரின் சுழற்சி வேகத்தைக் குறைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
ஆழ்கடல் நீரின் சுழற்சி கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது வளிமண்டலத்தில் இருந்து உறிஞ்சப்படும் கார்பனை வரிசைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அண்டார்க்டிக்கில் வேகமாக பனி உருகுவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சரியாகச் சென்று கொண்டிருந்த ஆழ்கடல் நீரின் சுழற்சி தற்போது தலைகீழாக மாறி விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.