போலி ஆவணங்கள் சமர்பித்து வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த 11 பேர் கொண்ட குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் மூன்று காவல்துறையினரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரை கண்காணிக்கும் சிறப்பு படையினரான IGPN அதிகாரிகள் மேற்கொண்டுவந்த நீண்டகால விசாரணைகளை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை வங்கிகளில் சமர்பித்து, கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டு தரவுகளை அழித்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து, 41, 43 மற்றும் 49 வயதுடைய மூன்று காவல்துறையினர் உள்ளிட்ட 11 பேர் கொண்ட குழுவை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மொத்தமாக €10 மில்லியன் யூரோக்களை மோசடி செய்துள்ளதாக அறிய முடிகிறது.