யாழில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டின் கதவை உடைத்து 3 3/4 பவுண் தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய இரண்டு சந்தேகநபர்களை ஒரு மணித்தியாலத்தில் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் (27-03-2023) திங்கட்கிழமை புலோலி, காந்தியூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலே இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
காலையில் வீட்டார் வெளியில் சென்றதை சாதகமாகப் பயன்படுத்தி வீட்டின் பின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 1 காப்பு, 1 சங்கிலி, 1 கைச்சங்கிலி, 1 நெக்லஸ் அடங்கலாக 3 3/4 பவுண் நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களையும் திருடிச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடாத்திய விசாரணையில் பொலிஸார் திருடப்பட்டுள்ள நகைகளை மீட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலமையில் பதில் பொறுப்பதிகாரி சேந்தன் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் மீட்கப்பட்ட நகைகளும் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.