பிரித்தானிய மக்களுக்கு விடுக்கபட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவில் சீஸ் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட சீஸ் (cheese) சேர்க்கப்பட்ட உணவை உண்ட நபரொருவர் உயிரிழந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீஸை சாப்பிட்டவர்களுக்கு லிஸ்டீரியாசிஸ் என்னும் நோய் பரவியுள்ளது.

இந்த நோய்த்தொற்றால் ஒருவர் பலியாகியுள்ளதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சீஸை வாங்கியவர்கள் அதை சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வயதான தங்கள் உறவினர்கள், கர்ப்பிணிகள் யாராவது அந்த சீஸை வாங்கியுள்ளார்களா என்பதை கவனித்துக்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். Baronet எனப்படும் ஒரு வகை சீஸ்தான் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

சீஸ் வாங்கியவர்கள், தங்கள் கடைக்காரரை அணுகி, அது பாதிக்கப்பட்ட சீஸா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த லிஸ்டீரியாசிஸ் என்பது, Listeria monocytogenes என்னும் நோய்க்கிருமி மூலம் பரவும் ஒரு நோயாகும். சீஸ், புகையூட்டப்பட்ட மீன், குளிரூடப்பட்ட மாமிசம் மற்றும் சாண்ட்விச்கள் எளிதாக இந்த கிருமியின் பாதிப்புக்குள்ளாகிவிடும்.

2019ஆம் ஆண்டு, பிரித்தானிய அரசு மருத்துவமனைகளில் சாண்ட்விச்கள் மூலம் பெருமளவில் இந்த லிஸ்டீயா நோய்த்தொற்று பரவியுள்ளது. ஏழு பேர் அதனால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சீஸ் தொடர்பில் பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor