மிளகாய் எண்ணெயில் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மிளகாய் எண்ணெயில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகிறது.
இது சருமம் வயதாகுவதை தடுக்கிறது. இந்த மிளகாய் எண்ணெயை பயன்படுத்தி நாம் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.
நன்மைகள்
மூட்டுகளில் ஏற்படும் பிரச்சினைகள், வயிற்று அசெளகரியம், கூந்தல் வளர்ச்சி, நாள்பட்ட நோய்கள் மற்றும் இருமல், சளித் தொல்லைகளையும் நம்மால் போக்க முடியும்.
மிளகாயில் கேப்சைசின் என்ற வேதிப்பொருள் உள்ளது இவை உடலுக்கு வெப்பத்தை அளித்து இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.
இதனால் மிளகாய் எண்ணெய் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.
மிளகாய் எண்ணெயின் நன்மைகள்
புரதத்தின் ஆதாரம்
ஒவ்வொரு 100 கிராம் மிளகாயிலும் ஒரு கிராம் அளவிற்கு புரதம் காணப்படுகிறது. எனவே மிளகாய் எண்ணெயை சமையலில் சேர்த்து வரும் போது போதுமான புரோட்டீன் சத்தை பெற்று கொள்ள முடியும்.
தசை வெகுஜன இழப்பு, நோயெதிர்ப்பு சக்தியை குறைதல் மற்றும் மோசமான சுவாச அமைப்பு ஆகியவற்றில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது
மிளகாய் எண்ணெயில் வைட்டமின் டி சத்தும் காணப்படுகிறது. வைட்டமின் டி அல்சைமர் நோய் மற்றும் எலும்பு நோயிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.
எனவே உங்களுக்கு போதுமான வைட்டமின் டி யை பெற மிளகாய் எண்ணெயை பயன்படுத்தி வரலாம்.
வயிற்று அசெளகரியத்தை சரி செய்கிறது
மிளகாய் எண்ணெய் வயிற்றில் ஏற்படும் வயிற்று அசெளகரியத்தை போக்க உதவுகிறது. தசை வலி இருக்கும் இடத்தில் மிளகாய் எண்ணெயை தடவி நிவாரணம் பெற முடியும்.
மிளகாய் எண்ணெயை வயிற்றில் தடவும் போது இரத்த ஓட்டத்தை அதிகரித்து செரிமானத்தை அதிகரிக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
மிளகாய் எண்ணெய் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் எந்தவொரு நோயும் உங்களை தாக்காது.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது
மிளகாய் எண்ணெயில் உள்ள கேப்சைசின் கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இந்த மிளகாய் எண்ணெயை தலையில் தேய்த்து வரும் போது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது மற்றும் முடியின் வேர்களை வலுப்படுத்துகிறது.
நாள்பட்ட நோய்களை போக்குகிறது
மிளகாய் எண்ணெயில் உள்ள உயர் ஆன்டி ஆக்ஸிடன்கள் செல்களை அழிக்கும் ப்ரீ ரேடிக்கலை தடுத்து நாள்பட்ட அழற்சியை போக்குகிறது.
ஆக்ஸினேற்ற அழுத்தத்தில் இருந்து செல்களை காக்கிறது. எனவே நாள்பட்ட நோய்களை தடுக்க மிளகாய் எண்ணெயை பயன்படுத்தி வரலாம்.
சளி மற்றும் இருமல் தொல்லைகள் போக்க உதவுகிறது
சளி, இருமல் மற்றும் காய்ச்சலை போக்க மிளகாய் எண்ணெய் பயன்படுகிறது.
சைனஸ் பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது
தொடர்ந்து தும்மல் வருவதை தடுக்க அரோமாதெரபியில் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
கண் பார்வை திறனை அதிகரிக்கிறது
மிளகாய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வை திறனை பராமரிக்க உதவுகிறது. கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவுகிறது.
மாகுலர் சிதைவு போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது. மிளகாய் எண்ணெயை பயன்படுத்தும் போது அதை எப்பொழுதும் மற்ற எண்ணெய்களுடன் நீர்த்துப் போகச் செய்து பயன்படுத்துங்கள்.
மாதவிடாய் பிடிப்பை போக்க உதவுகிறது
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுப் பிடிப்பை போக்க உதவுகிறது. மிளகாய் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.
இது வயிற்றில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வயிற்றுப் பிடிப்பை தணிக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியம்
மிளகாய் எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமம் வயதாகுவதை தடுக்க உதவுகிறது.
சிறுதளவு மிளகாய் எண்ணெயை பயன்படுத்தும் பேஸ் மாஸ்க்கில் சேர்த்து பயன்படுத்தி வரலாம்.
இது உங்கள் முகத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது மற்றும் சருமம் வயதாவதைத் தடுக்கிறது.