மூன்றாம் நிலை தொழில்கல்வியினை பூர்த்தி செய்த மாணவர்களில் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு செல்லுவதே அதிகம் – யாழ் தொழில்நுட்பக்கல்லூரிபணிப்பாளர்

மூன்றாம் நிலை தொழில்கல்வியினை பூர்த்தி செய்த மாணவர்களில் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு செல்லுவதே அதிகம்…என
யாழ் தொழில்நுட்பக்கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் தெரிவிப்பு

யாழ் தொழில்நுட்பகல்லூரி,இலங்கை தொழிற்ப்பயிற்சி அதிகார சபை,நயிடா தொழில் பயிற்சி கல்லூரி, ஆகியவற்றில் கல்வினை கற்று முடித்த மாணவர்களில் புலர்பெயர்ந்த நாட்டில் தொழிலுக்காக சென்ற மாணவர்களின் கட்டார்,டோபா,ஆகிய நாடுகளுக்கு சென்றவர்களே மிக அதிகம் அதில் மூன்று இலட்சம்,நான்கு இலட்சத்திற்கும் உள்ளவர்களாக இருக்கின்றனர்….அதில் மூன்றாம் நிலைகல்வி வழங்கலின் ஊடாக நாட்டின் பொருளாதாரநிலையினை உயர்த்துவதற்கு பங்களிப்பு செலுத்திவருகின்றனர்…யாழ் தொழில்நுட்பக்கல்லூரியின்பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் தெரிவித்தார்

யாழ் தொழில்நுட்பக்கல்லூரியின் 60வது ஆண்டு வைரவிழாவினை 27
03 அன்று கொண்டாடும் முகமாக முன்னேற்பாடு தொடர்பாக ஊடகவியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பு ஒன்று யாழ் தொழில்நுட்பக்கல்லூரியின் மண்டபத்தில் கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது… மேலும் கருத்துதெரிவிக்கையில்

1959 ஆவது ஆண்டில் கிட்டத்தட்ட 100 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக் தொழில்நுட்பக்கல்லூரி,2023ஆண்டில் முழுநேர,பகுதிநேர ஆகியபயிற்சிநெறிக்காக கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் ஆங்கில,தமிழ் ஆகிய இருமொழிகளில் கல்விகற்றுவருகின்றனர்….

வடமாகாணத்தினை எடுத்துக்கொண்டால் மாவட்ட செயலகம்,வடமாகாண திணைக்களம்,ஆகியவற்றில் பொறியியல்,கட்டிட நிர்மாணத்துறை, மின்சாரப்பகுதி, நீர்ப்பாசனம்ப்பகுதி,பிரதேசசெயலகம்,ஆகிய பகுதிகளில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மேற்பார்வையாளர்கள்,பதவிநிலை உத்தியோகத்தர்கள் அனைவரும் யாழ் தொழில் நுட்பக்கல்லூரியில் கல்விகற்றுவந்த மாணவர்களாக காணப்படுகின்றனர்….

தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெறுகின்ற பல்வேறுபட்ட பயிற்சிநெறிகள்
உள்வாங்கவேண்டிய தகமைகள் இப்பயிற்சிநெறியினை பூரணமாக்கப்பட்ட முடித்தபின் எற்படுத்தப்படுகின்ற தொழில்கள் அதன் ஊடான வருமானங்கள் என்ப இந்த பவளவிழாவின் போது தெளிவூட்டப்படயிருக்கின்றன….

யாழ் மாவட்டத்தில் பின்தாங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் மட்டத்தில் இவ் தொழில்நுட்டம் சார்ந்த தகவல் சென்றடையவில்லை.வெளிமாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு இப்பயிற்சி நெறிகள் பற்றி தெரியப்படுத்தப்படவில்லை…என்றார்

இதில் மேலதிக பணிப்பாளர் என்,முகுந்தன், முன்னாள் கல்லூரியின் பணிப்பாளர் வ.சாந்தகுமார்,ம.ஜனாத்தனன் விழாக்குழுவின் தலைவராகவும்,பதிவாளர்.ப.ஜெயசீலன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்….

Recommended For You

About the Author: webeditor