கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தானும் தனது ஏழு வயது மகனும் இறந்து விட்டதாக போலி பிரச்சாரம் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கனடாவை விட்டு தப்பி செல்வதற்காக இவ்வாறு போலி நாடகம் ஆடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
48 வயதான டாவான் வால்கர் என்ற பெண் இவ்வாறு போலியாக தானும் தனது மகனும் மரணித்து விட்டதாக ஓர் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
விசாரணைகளின் போது தனது முன்னாள் கணவர் துன்புறுத்தியதாகவும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தாம் இவ்வாறு போலி யாக நாடகம் ஆடியதாக தெரிவித்துள்ளார்.
எவ்வாறினும் அவரது முன்னாள் கணவர் துன்புறுத்தல்களை மேற்கொண்டமைக்கான எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப் பெறவில்லை வால்கர் மற்றும் அவரது மகன் காணாமல் போனதை தொடர்ந்து கனடாவின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு பின்னணியில் வால்கர் மற்றும் அவரது மகன் ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.
வால்கர் அமெரிக்காவின் ஒரிஜான் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிள்ளையை கடத்தியமை போலியான தகவல்களை பிரச்சாரம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வால்க்கருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தான் இறந்து விட்டதாக தெரிவித்து போலி ஆள் அடையாள தகவல்களை பயன்படுத்தி வால்கர் எரிவாயு உள்ளிட்ட சேவைகளை பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
வீட்டு வன்முறை தொடர்பில் தாம் போலீசாரிடம் முறைப்பாடு செய்த போதிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணாகிய தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் பழங்குடி இனத்தவர் அல்லாத ஆண்களுக்கு சாதகமான முறையில் போலீசார் நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வால்கார் காணாமல் போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது வேறு வலி இன்றியே தாம் மரணித்து விட்டதாக நாடகமாடியதாக வால்கர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்