வடமாகாண மகளிர் விவகார அமைச்சு,மற்றும் யாழ் இந்திய உதவித்தூதரகத்தின் இணைந்த எற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் மகளிர்களின் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இன்று வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்றது…
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா,சிறப்புவிருந்தினராக யாழ் இந்திய உதவித்தூதரகத்தின் உதவித்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் கலந்துகொண்டு உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நாடாவெட்டிவைத்தனர்..
இதில் வடமாகாணத்தில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் தெரிவுசெய்யப்பட்ட 38 பெண்கள் தலைமைத்துவமான குடும்பங்களின் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் மகளிர்களின் உற்பத்திப்பொருட்கள் இதன்போது கூடாரம் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இன்று மாலையுடன் இனிதே நிறைவடையும்..
வடமாகாண பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்.வ.உமாகாந்தன்,
வடமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்,மஹிந்த குணரட்ன, வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள்,திணைக்களப்பணிப்பாளர்கள்
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் ,மேலதிக அரசாங்க ம.பிரதீபன்,யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்,மாகாண உற்பத்தியாளர்களின் மகளிர்கள் பலரும் கலந்துகொண்டனர்…..
வடமாகாண முன்னாள் அவைத்தலைவர் சி வி சிவஞானம்,மற்றும் மதத்தலைவர்கள், சான்றோர், பார்வையாளர்கள்,கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்….