கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பாரிய கப்பல் குறித்து வெளியாகியுள்ள செய்தி

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS சுகன்யா’ என்ற கப்பல் நல்லெண்ண உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று(27.02.2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நாட்டிற்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றுள்ளனர்.

101 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பலில் 106 பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு கடற்படையினரும் இணைந்து பயிற்சி
இதற்கிடையில், கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் பிரணவ் ஆனந்த் நேற்று காலை மேற்கு கடற்படை கட்டளை பிரிவின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்துள்ளார்.

இலங்கை வந்துள்ள இந்திய கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபடுவரென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இரு கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், சில சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதற்கும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.

இதேவேளை தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு, ‘INS சுகன்யா’ நாளை நாட்டிலிருந்து வெளியேறவுள்ளது.

Recommended For You

About the Author: webeditor