கொழும்பில் காணிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கொழும்பு மாவட்டத்தில் காணி விலைகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அறிவிப்பின் படி, கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைமதிப்பீட்டுக் குறிகாட்டியானது 2022இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியின் போது ஆண்டுக்காண்டு அடிப்படையில் 205.2ஆக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி 14.8 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறியீட்டின் உயர்விற்கு காரணம்
குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழில்துறை ஆகிய மூன்று குறியீடுகளின் உயர்வின் விளைவாக நில மதிப்பீட்டுக் குறியீட்டின் உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இங்கு, தொழில்துறை நில விலைகள் 15.7 சதவீதம் கொண்ட அதிகூடிய ஆண்டு அதிகரிப்பினைப் பதிவுசெய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor