லண்டனிலிருந்து தங்கை அனுப்பிய பெரும் தொகை பணத்தை தனது வங்கிக் கணக்கில் போட்டு முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தங்கையை ஏமாற்றிய சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.
இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் வட்டி வீதம் கூடுதலாக உள்ளதாக லண்டனில் உள்ள தங்கையிடம் அண்ணன் கூறியுள்ளார் .
இதனையடுத்து தனது தாயின் பெயரில் வங்கிக் கணக்கு திறந்து அவரது கணக்கில் வைப்பிலிடுமாறு தங்கை 30 லட்சம் ரூபாவை முதலில் தனது அண்ணனுக்கு அனுப்பியுள்ளார்.
அண்ணன் நாடகம்
எனினும் அண்ணன் அந்த பணத்தை தாயின் பெயரில் வைப்பிலிடாது தனது பெயரில் வைப்பிலிட்டதாகத் தெரியவருகின்றது. இதனையறியாத தங்கை 20 வருடங்களின் பின் ஒரு கோடி ரூபா வரக்கூடியதாக வங்கியில் வைப்பிலிடுவதற்காக 7 லட்சம் ரூபா பணத்தை அனுப்பியுள்ளார்.
இந் நிலையில் அண்ணனின் மகள் இளைஞன் ஒருவரை காதலித்து வந்த நிலையில் தந்தையால் தாக்கப்பட்ட காதலன் பொலிசாரிடம் முறையிட்டதால் அது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றதாகவும் கூறப்படுகின்றது.
இச் சம்பவத்தை அடுத்து குறித்த நபரின் மகள் தனது லண்டன் அத்தையிடம் பணம் தந்தையின் பெயரில் வைப்பிலிட்ட தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.
லண்டன் தங்கை தாயாரிடம் இது தொடர்பாக விசாரித்த போது தன்னை வங்கிக்கு கொண்டு சென்று காசு போட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார் தாயார். ஆனால் அந்த வங்கி உறுதிச் சீட்டில் தாயாரின் பெயரில் வெறும் ஒரு லட்சமே போடப்பட்டிருந்தமை தங்கைக்கு தெரியவந்துள்ளது.
கடும் தொனியில் அச்சுறுத்திய அண்ணன்
இது தொடர்பாக தனது அண்ணனிடம் தங்கை விசாரணை செய்ய கடும் தொனியில் அச்சுறுத்தியுள்ளார் சகோதரர். அதுமட்டுமல்லாது தனது பாதுகாப்பில் இருக்கும் 75 வயதான நோயாளியான தாயாரையும் வீட்டை விட்டு துரத்தப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளார்.
அத்துடன் பணம் தொடர்பாக தனது தங்கைக்கு போட்டுக் கொடுத்த மகளையும் அவர் கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
இந்த நிலையில் தாக்குதல் மற்றும் பண முறைகேடுகள் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரியவருகின்றது.
புலம் பெயர்வாழ் உறவுகளே இதுபோன்ற உறவுகளை நம்பி நீங்களும் ஏமாறாது இருங்கள். அதுமட்டுமல்லாது இந்த சம்பவம் பலருக்கு ஓர் படிப்பினையாகவும் அமைந்துள்ளது.