யாழில் உள்ள பீட்சா நிறுவனத்தை நிரந்தரமாக மூட உத்தரவு!

யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பல்தேசிய கம்பனி ஒன்றின் உணவகத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என நல்லுார் பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்படி உணவகத்திற்கு சமய அமைப்புக்கள் சில எதிர்ப்பு காட்டியிருந்த நிலையில், கட்டிட அமைவுச் சான்றிதழ் மற்றும் வியாபார அனுமதிப் பிரத்திரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்படாமையினால், நல்லுார் பிரதேசசபையின் 17/01/2023ம் திகதி அமர்வில் அது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

அத்துடன், சட்ட ஆலோசனை பெறுவதெனவும் அதுவரையில் குறித்த உணவகத்திற்கான அனுமதியை தற்காலிகமாக நிறுத்துவது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

மூட உத்தரவு
அதன்படி நல்லுார் பிரதேசசபை தவிசாளரின் 20/01/2023ம் திகதிய கடிதத்தின் படி உணவகத்தை தற்காலிகமாக மூடும் உத்தரவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் நல்லுார் பிரதேசசபையில் தவிசாளர் ப.மயூரன் தலைமையில் மேற்படி உணவகத்திற்கான அனுமதி குறித்து ஆராய்வதற்கான கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது உணவகத்திற்கு எதிரே 10 மீற்றர் இடைவெளியில் சைவ ஆலயம் அமைந்திருக்கும் நிலையில் உணவகதற்கு அனுமதி வழங்குவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor