தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இதனால் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நாகை மற்றும் மயிலாடுதுறையில் காலைமுதலே கனமழை பெய்து வருகிறது.
இதனால் இரு மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் தம்புராஜ், லலிதா, காயத்திரி கிருஷ்ணன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.