இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொது சுகாதார சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த சில நாட்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், கோவிட் மரணங்களும் சடுதியாக அதிகரித்து வருகின்றது. எனவே கோவிட் வைரஸ் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
பொது மக்களை தேடிச்சென்று ரெபிட்- என்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்ய வசதிகள் இல்லை. எனினும், ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள தேவையற்ற ஒன்றுகூடல்களை தவிர்த்து முகக்கவசம் மற்றும் சுகாதார வழிமுறைகள் ஆகியவற்றை முறையாக பின்பற்றுமாறும் குறிப்பிட்டுள்ளார்.