யாழில் லாஃப் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாஃப் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 52 வெற்று கொள்கலன்களை திருடிய குற்றச்சாட்டில் முதன்மை சந்தேக நபர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாஃப் எரிவாயு நிறுவனத்தின் களஞ்சிய சாலையை உடைத்து 7 லட்சத்து 80 ஆயிரம் பெறுமதியான 52 வெற்றுச் கொள்கலன்கள் திருட்டுப் போயிருந்தன.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி மற்றும் நாவாந்துறை பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டடனர்.

சந்தேக நபர்களிடமிருந்து திருடப்பட்ட கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டன.

மேலும், விசாரணைகளின் பின் சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

Recommended For You

About the Author: webeditor