இலங்கையில் கையடக்கதொலைபேசி வர்த்தகம் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக கையடக்கத் தொலைபேசிகள் கடத்தப்படுவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் சமித செனரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு ரிமோட் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதால் நாட்டுக்கு வரி வருமானம் இழப்பு ஏற்படுவதோடு அந்நியச் செலாவணியும் நாட்டிற்குக் கடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சட்டவிரோத கையடக்கத் தொலைபேசிகள் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.