கடந்த 15ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தாம், வன்முறையை தூண்டியமை மற்றும் அதிகளவு ஆட்களை கூட்டியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பொலிஸாரால் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரி வேலன் சுவாமிகள் இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் தனது கைதிற்கு நீதி கோரி முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா மற்றும் ஆகியோர் உடனிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த வாரம் வேலன் சுவாமி கைது செய்யப்பட்டு யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.