வவுனியாவில் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1,580 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலிற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணி கடந்தவாரம் நிறைவுபெற்றது.
இந்நிலையில், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்த 53 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயேட்சை குழுக்களினதும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை வாக்காளர்கள்
அந்தவகையில், குறித்த கட்சிகள் மற்றும் சுயேட்சைகுழுக்களை சேர்ந்த 1,580 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் களம் இறங்கியுள்ள நிலையில், அவர்களை தெரிவு செய்வதற்காக 126,915 வாக்காளர்கள் தகுதிபெற்றுள்ளர்.
குறிப்பாக வவுனியா மாநகரசபையில் 20,846 வாக்காளர்களும், வவுனியா வடக்கு பிரதேசசபையில் 14,533 வாக்காளர்களும், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபையில் 11,417 வாக்காளர்களும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 61647 வாக்காளர்களும், வெங்கலசெட்டிகுளம் பிரதேச சபையில் 18,472 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.