சீனாவில் இருந்து இலங்கைக்கு தண்டவாளங்கள் இறக்குமதி!

ரயில் தடம்புரள்வுகளை குறைக்கவும் தொடரூந்து சேவைகளை மேம்படுத்தவும் 45 அடி நீளமுள்ள 10,000 ரயில் தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக தொடருந்து தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதங்களில் இறக்குமதிகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் புனரமைப்பு இடம்பெறும் போது தொடரூந்து பாதைகள் மூடப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

அதுவரையில் இருக்கும் வளங்களைக் கொண்டு ரயில் சேவைகளை நிர்வகிக்க வேண்டும். சில மாற்றீடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு வருகின்றன.

பாணந்துறை வாதுவ ரயில் மார்க்கத்தின் பல இடங்களில் தண்டவாளங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றார்.

ரயில் தண்டவாளங்களை இறக்குமதிசெய்ய ஒரு பில்லியனுக்கும் அதிகமாக செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 10-20 ஆண்டுகளுக்குள் மாற்றியமைக்கப்பட வேண்டிய தண்டவாளங்கள் விலைமனு கோரப்படாததால் மேம்படுத்தப்படவில்லை என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

மேலும் கரையோர தண்டவாளங்களின் நிலைமை மோசமாக உள்ளது. கடலுக்கு அருகில் இருப்பதால் ஐந்து ஆண்டுகளுக்குள் அவற்றை மாற்ற வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், ஓராண்டு கால எல்லைக்குள் அவை சரிசெய்யப்படுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor