இந்தியாவில் தொடர்ச்சியாக பரவி வரும் பறவைக்காய்ச்சல் காரணமாக முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஹேமாலி கொத்தலாவல அரச வர்த்தக கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.
சுகாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய தொழில்நுட்ப ரீதியாக அனுமதி வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் 2021 முதல் செப்டம்பர் 2022 வரை ஐரோப்பாவில் 2,500 பறவைக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
2006 முதல் அவ்வப்போது இந்தியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று பரவி வருகின்ற நிலையில், முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அனுமதியுடன் வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.