பொலிஸ் திணைக்களம் பத்து பிரிவுகளாக பிளவடையும் சாத்தியம்!

பொலிஸ் திணைக்களம் பத்து பிரிவுகளாக பிளவடையும் சாத்தியம் உருவாகியுள்ளதாக ஓய்வு பெற்ற உயர் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சுட்டிக்கட்டியுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கினால் நாட்டின் பொலிஸ் திணைக்களம் பத்து துண்டுகளாக பிளவடையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
பயங்கரவாத தடைப்பிரிவு

பொலிஸ் திணைக்களம் பத்தாக பிளவடையும் சாத்தியம்:வெளியான தகவல் | The Police Department Is Likely To Split Into Ten

இதன்படி, பயங்கரவாத தடைப்பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, இரகசிய பொலிஸ் பிரிவு, தேசிய புலனாய்வுப் பிரிவு என்பன அந்தந்த மாகாண முதலமைச்சர்களின் அனுமதியின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க அனுமதியில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மும்மை நகரம் மீதான குண்டுத் தாக்குதல் மற்றும் காஷ்மீர் மீதான தாக்குதல்களின் போது இந்த நிலைமை உருவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹாராஸ்டிர மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கு விசேட படையினரை அனுமதியின்றி அனுப்பி வைக்க மத்திய அரசாங்கத்தினால் முடியவில்லை என சிங்கள பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor