வரலாற்றில் முதன் முறையாகக் கொடுக்கப்பட்ட ‘வெள்ளை அட்டை‘

காற்பந்து வரலாற்றில் முதன்முறையாக நடுவரால் ‘வெள்ளை அட்டை‘ கொடுக்கப்பட்ட சம்பவம் போர்த்துக்கலில் நடைபெற்ற பெண்களுக்கான காற்பந்துப் போட்டியில் இடம்பெற்றுள்ளது.

காற்பந்துப் போட்டிகளில் பொதுவாக மஞ்சள் மற்றும் சிவப்பு சிற அட்டைகளையே நடுவர்கள் பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கின்றோம்.

இது வீரர்களின் மோசமான நடத்தை மற்றும் விதிமீறல்களைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது மூன்றாவது நிற அட்டையாக வெள்ளை நிற அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வீரர்களின் சிறந்த விளையாட்டுக் குணத்தை (Sportsmanship) பாராட்டவும் நேர்மை மற்றும் மதிப்புமிக்க நடத்தைகளை ஊக்குவிக்கவும் இந்த வெள்ளை கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அண்மையில் பெஃப்னிகா மற்றும் ஸ்போர்டிங் லிஸ்போன் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற குறித்த போட்டியில் இரு அணி மருத்துவ உதவியாளர்களும் ஒருவருக்கொருவர் உதவியமையைப் பாராட்டும் வகையில் நடுவர் தனது பையில் இருந்து வெள்ளை அட்டையைக் காட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவமானது காற்பந்து ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin