மாரடைப்பிற்கான அறிகுறிகள்

மாரடைப்பு என்பது ஒரு மோசமான விஷயம் எந்த நேரத்தில் ஒருவருக்கு மாரடைப்பு வரும் என்பது நமக்கு தெரியாது.

மாரடைப்பு ஏற்பட்டால் மீண்டும் உயிர் பிழைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மாரடைப்பு ஏற்படப்போகிறது என்பதை நாம் முன்கூட்டியே தெரிந்துகொண்டால் உடனே அதற்கு தகுந்த சிகிச்சையை பெற்று குணமடைந்து விடலாம்.

ஒருவருக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே சில அறிகுறிகள் நமக்கு உணர்த்துகின்றது, அதனை நாம் கவனமாக உற்றுநோக்குவதன் மூலம் உயிரிழப்பு ஏற்படாமல் தற்காத்து கொள்ளலாம்.

அறிகுறிகள்
பலரும் நெஞ்சு வலியை சாதாரண வலி என நினைத்து அலட்சியமாக இருந்துவிடுகின்றனர், ஆனால் நெஞ்சு வலி என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

மார்பில் ஒருவிதமான இறுக்கமான உணர்வு ஏற்படுவது கவனிக்கப்பட வேண்டிய அறிகுறியாக கருதப்படுகிறது.

திடீரென நெஞ்சு பகுதியில் இறுக்கமாக உணர்வது, பலவீனமாக உணர்வது, மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவது, அதிகளவில் வியர்த்தல் போன்றவை மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் தோன்றும்.

முதல் அறிகுறி

மாரடைப்புக்கான முதல் அறிகுறி இடது கை மற்றும் அந்த பக்க மார்பில் வலி ஏற்படுவது தான், தாடையின் இடது பக்கமும், கழுத்தும் வலிக்க ஆரம்பிக்கும்.

இந்த வலியானது மிகவும் கடுமையானதாக இருக்கும், சிலருக்கு இது ஓரளவு எரிச்சலை தருவது போன்று இருக்கும்.

சிலருக்கு முக்கிய அறிகுறி தோள்பட்டை இடையே உள்ள முதுகுவலி இதய நோய்கள் ஒவ்வொரு ஆண்டும் 18 மில்லியன் உயிர்களைக் கொள்கின்றது.

இதய நோய்களின் பொதுவான ஆபத்து காரணிகள் ஆரோக்கியமற்ற உணவு, குறைவான உடல் செயல்பாடு, அதிகப்படியான மது அருந்துதல், உயர் இரத்த அழுத்தம், உயர்ந்த இரத்த குளுக்கோஸ், அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகும்.

சிலருக்கு மூச்சுத் திணறல், வலி, குமட்டல், லேசான தலை அல்லது தலைச்சுற்றல், சோர்வு, நெஞ்செரிச்சல் அஜீரண உணர்வு போன்றவை ஏற்படும்.

Recommended For You

About the Author: webeditor