அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி
எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்பட சர்வதேச நிதி அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது
ஒரு அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் 262.6 ரூபாயாக உள்ளது. ரூபாயின் வீழ்ச்சி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் பின்நோக்கி இழுத்து சென்றுள்ளது.
அதேவேளை கடந்த ஆண்டு இலங்கையும் இவ்வாறான கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது.