வெங்காயத் தோலின் நன்மைகள்

வெங்காயம் அனைவரது சமையலறையிலும் காணப்படும் ஒரு காயாகும். பல வகையான உணவு வகைகளை சமைக்க இது பயன்படுத்தப்படுகின்றது.

இது உணவின் சுவையை கூட்டுகிறது.வெங்காயத்தை உரித்த பிறகு அதன் தோலை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீசுகிறோம்.

வெங்காயத் தோலின் மகத்துவம் என்ன? அதை எவ்வாறு பயன்படுத்தலாம்?

கண்பார்வை

வெங்காயத் தோலில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இது கண்பார்வையை அதிகரிக்கச் செய்கிறது மற்றும் மாலைக்கண் போன்ற நோய்களைத் தடுக்கிறது. இதற்கு வெங்காயத்தோல் தேநீர் தயாரித்து அருந்த வேண்டும். மேலும் இதனால் சருமத்தின் தன்மையும் மேம்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி

வெங்காயத் தோலில் வைட்டமின் சி-யும் இருக்கிறது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது வைரஸ் தொற்று அபாயத்தைக் குறைக்கிறது. இதனால் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் வராது.

கூந்தல் ஆரோக்கியம்

கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெங்காயத் தோலை பயன்படுத்தலாம். இதற்கு வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசவும். இதனால் கூந்தல் உதிர்தல் பிரச்சனை நீங்கும்.

இதய நோயாளிகளுக்கு நல்லது

வெங்காயத்தோல் இதய நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இதற்கு வெங்காயத் தோலைக் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு வெந்நீரில் கொதிக்க வைக்கவும். அதன் பின் அதை வடிகட்டி அந்த நீரை குடிக்கவும். இந்த நீரை குடித்து வந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு குறைகிறது.

தொண்டை புண்

வெங்காயத் தோல்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

Recommended For You

About the Author: webeditor