உக்ரைனியப் போர் மேலும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய அதிநவீன, கனரக ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கப்போவதாக நேட்டோ கூட்டமைப்பு கூறுகிறது.
இதற்கிடையே போரில் கிரைமியாவும் தாக்கப்படலாம் என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் மூத்த அதிகாரி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருக்கும் கிரைமியாவைத் தாக்கக்கூடாது என்று யாரும் வாதிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் பேசிய நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் (Jens Stoltenberg) உக்ரேனுக்குக் கூடுதல் ஆயுதம் தேவை என்று தெரிவித்தார்.
எனினும் அது குறித்து ஜெர்மனி தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.