யு.எஸ். மருந்து தயாரிப்பாளரான ஃபைசர் இன்க் மற்றும் ஜெர்மன் பங்குதாரர் பயோஎன்டெக் ஆகியவற்றின் அண்மைய புதுப்பிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசி, வயதானவர்களுக்கு மூளை பக்கவாதத்தை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பில் அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு; தடுப்பு மையங்கள் மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இதனை தெரிவித்துள்ளது.
பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம், இந்த தடுப்பூசி தரவுத்தளத்தில் சாத்தியமான பாதுகாப்பு சிக்கலைக் கண்டறிந்துள்ளது.
இதில் 65 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, ஃபைசர் ஃபயோஎன்டெக் பைவலன்ட் தடுப்பூசியைப் பெற்ற 21 நாட்களுக்கு பின்னர், இஸ்கிமிக் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மூளை இஸ்கிமியா என்றும் அழைக்கப்படும் இஸ்கிமிக் பக்கவாதம், மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளால் ஏற்படுகிறது இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள சுகாதார பாதுகாப்பு திட்டங்களின் முக்கிய நிறுவனங்கள், உடனடியாக இந்த தகவல்களை உறுதி செய்யவில்லை.
முற்றாக இந்த சுகாதாரப் பாதுகாப்பு சிக்கல் குறித்து தொடர்ந்தும் ஆய்வுகள் தேவை என்று தெரிவித்துள்ளன. இதேவேளை மொடர்னா பைவலன்ட் தடுப்பூசியின் மூலம் இந்தப் பாதுகாப்பு பிரச்சினை அடையாளம் காணப்படவில்லை என்று ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.