சீன ஜனாதிபதி ஸீ ஜின்பின், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த கடிதம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட பிரதிநிதிகளில் ஒருவரான ஷென் ஷவ்வினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சீன உயர்மட்டப் பிரதிநிதிகள் நேற்று (14.01.2023) ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு
இந்த கடிதம் தொடர்பில் இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
கடிதத்தில் எவ்வாறான விடயங்கள் கூறப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல்கள் எதுவும் விரிவாக வெளியிடப்படவில்லை.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனாவின் உதவியை நாடி நிற்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
H.E. Chen Zhou, Vice Minister of the International Department, the Communist Party of China Central Committee has arrived at BIA just now and received warmly welcome.
Hello Sri Lanka!
Ayubowan!
Vanakkam!
你好,斯里兰卡!— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) January 14, 2023