கடன் பெற்ற பணத்தினை திரும்ப செலுத்த இயலாமல் தவிக்கும் அரிசி ஆலை உரிமையாளர்கள்

சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் தமது அரிசி ஆலைகள் மற்றும் களஞ்சியசாலைகளை அடமானம் வைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று எடுத்த பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிப்பதாக ஐக்கிய அரிசி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.

இவற்றில் பெரும்பாலானவை அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் இருப்பதுடன், கடந்த மாதம்தான் அந்த இரண்டு மாவட்டங்களிலும் ஆறு ஆலைகள் ஏலம் விடப்பட்டன. இவ்வாறான ஐந்து ஆலைகள் இம்மாதம் ஏலம் விடப்பட உள்ளன.

கடந்த 2010ம் ஆண்டு முதல், அடமானம் வைத்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாததால், சொத்து ஏலம் விடப்படுவதாக கூறப்படுகிறது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகளின் உரிமையாளர்கள் பெரிய அளவிலான ஆலைகளுடன் போட்டியிட முடியாமல் ஒவ்வொரு பருவத்திலும் பெரும் நஷ்டத்தை சந்திப்பதாக தலைவர் குறிப்பிட்டார்.

நாளொன்றுக்கு அறுபத்து நான்கு (64) கிலோகிராம் 50-500 மூடை அரிசி உற்பத்தி செய்யும் ஆலைகளே இவ்வாறு ஏலம் விடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor