இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி இலக்கம் 2307/12 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் அரசாங்க நிதிக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
விளையாட்டுப் பொருட்கள், புகையிரத உதிரி பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் துறையில் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
உயர் வரி விதிப்பு
சுற்றுலா மற்றும் அழகுசாதன பொருட்கள் போன்ற கைத்தொழில்களுக்கு தேவையான பொருட்களை குறிப்பிட்ட உயர் வரி விதித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகளின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது விரும்பத்தக்கது என வர்த்தமானிக்கு அனுமதி வழங்கிய குழு தெரிவித்துள்ளது.
அவ்வாறு இல்லையெனில் கறுப்புச் சந்தை வியாபாரத்தை தடுக்க முடியாது என குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தமானி எண் 2308/51 இல் வெளியிடப்பட்ட அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகளுக்கு குறித்த குழு ஒப்புதல் அளித்துள்ளது.