பொத்துவில் கே.சுல்பிகாருக்கு ஓட்டமாவடி தவிசாளரினால் வரவேற்பு
“போதையை ஒழிப்போம், பாடசாலை மாணவர்களைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பொதுமக்கள், இளைஞர்கள், பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திருகோணமலையிலிருந்து பொத்துவில் வரை சைக்கிளோட்டதை ஆரம்பித்துள்ள பொத்துவிலையைச்சேர்ந்த கே.சுல்பிகாருக்கு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் அவர்களினால் ஓட்டமாவடி
வரவேற்பளிக்கப்பட்டதுடன், அவரது உயரிய எண்ணத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் பிரதேச சபைக்கு அழைத்து நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவித்தார்.
நேற்று முன் தினம் திருகோணமலையில் வைத்து கிழக்கு மாகாண
சுகாதார அமைச்சின் செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்பூட்டும் சைக்கிளோட்டம் பொத்துவிலை சென்றடையவுள்ளது.குறித்த இளைஞர் சுமார் 253 கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியின் மூலம் சென்றடைந்த எடுத்த முயற்சியை பாராட்டிக் கெளரவிக்கும் வகையிலேயே தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையிலான உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சிவில் சமூகத்தலைவர்கள் குழுவினரால் வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அவது எண்ணம் நிறைவேற தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இதன் போது தவிசாளர் தெரிவித்தார்.