குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று மாதுளை.
இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் உறைவிடமாக இருப்பதால் பல வகையான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
குறிப்பாக நாம் வேண்டாம் என தூக்கி ஏறியும் மாதுளம் பழத்தின் தோல்கள் கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்டிருந்தாலும் இவை பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகின்றது.
நன்மைகள்
மாதுளை தோலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் அதிக ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் இருப்பதால் மாதுளை தோல்கள் உண்மையில் அதன் விதைகளை விட ஆரோக்கியமானவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்த உதவுகின்றது என்று சொல்லப்படுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
உதவும் முறை
மாதுளம் பழத்தின் தோல்கள் வீக்கம், வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கல்லீரலை சுத்தம் செய்கிறது.
நீங்கள் இருமலால் தொந்தரவு பாதிக்கப்பட்டிருந்தால், மாதுளை தோலின் சாறு அல்லது பொடியை சாப்பிட முயற்சிக்கவும்.
தோல் பிரச்சனை
மாதுளம் பழத்தின் தோல் பருக்கள் மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும். எனவே இதன் தோல்களை ஃபேஸ் பேக் அல்லது ஃபேஷியல் ஸ்க்ரப் பயன்படுத்தலாம். இது உங்கள் முகத்தில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற உதவும்.