எரிபொருள் விலையில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

எரிபொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் வரி 27 ருபாவிலிருந்து 52 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுப்பர் டீசல் லீட்டரின் வரி 13 ரூபாவிலிருந்து 38 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் வரி அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் புதிய விலை அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இதேவேளை நேற்று முன் தினம் மேற்கொள்ளப்பட்ட டீசல் விலை குறைப்புடன், ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 405 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 365 ரூபாவாக இருந்த ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 355 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor