நாட்டுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட ஒரு தொகை மருந்துகள்

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை மருந்து வகைகளை ஏனைய பிரதேசங்களுக்கு பகிர்வதற்கு முற்பட்ட வேளையில் குறிப்பிட்ட குழுவினர் கைது செய்யப்பட்டதாக தேசிய ஒளடத ஒழுங்கமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த அதிகார சபையைச் சேர்ந்த அதிகாரிகள் புறக்கோட்டையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மருந்து தொகை கைப்பற்றப்பட்டது.

இந்த மருந்துத் தொகையின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாகும். இந்தியா, துருக்கி, இத்தாலி உட்பட பல நாடுகளிலிருந்து இந்த மருந்து வகைகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளன என்பது ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தற்சமயம் விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகார சபையின் உணவு மற்றும் மருந்து பரிபாலன அதிகாரி அமித் பெரேரா தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor