மௌத் வாஷ் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். வாய்த்துர்நாற்றம் போக்கவும் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதற்காகவும், வாயை புத்துணர்ச்சியாக்கவும் நாம் மௌத் வாஷ் அதிகமாக பயன்படுத்துவது வழக்கம்.
மௌத் வாஷில் என்னென்ன பக்கவிளைவுகள் இருக்கிறது என பார்க்கலாம்.
வாயில் வறட்சி
தொடர்ந்து நாம் மௌத் வாஷ்பயன்படுத்துவதால் வாய் வறட்சியாக இருக்கும். இவ்வாறு வறட்சியாக உணர்ந்தால் அதற்கு காரணம் மௌத் வாஷ். ஏனெனில் மௌத் வாஷில் அல்கஹால் உள்ளது. அதனால் இதை அதிகமாக பயன்படுத்தினால் வாயில் வறட்சி ஏற்படும்.
மௌத் வாஷ் பயன்படுத்துவதால் பெரும்பாலானோருக்கு வாயில் எரிச்சல் மற்றும் வலி இருக்கும். மௌத் வாஷில் அதிக அளவு அல்கஹால் இருப்பதால் வாயில் எரிச்சல் மற்றும் வலி ஏற்படும். மேலும், மௌத் வாஷ் பற்களில் கறை படிதல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோய்
மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு இரு முறை மௌத் வாஷ் செய்பவர்களுக்கு 55% சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மௌத் வாஷ் உபயோகிப்பதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் சக்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
புற்று நோய்
மௌத் வாஷில் உள்ள செயற்கை கூறுகள் புற்றுநோய் அபாயத்தை அதிரிக்கக் கூடும். இவ்வாறான சூழ்நிலையில், தினமும் அல்லது அளவிற்கு அதிகமான மௌத் வாஷ் பயன்படுத்துபவர்களுக்கு, புற்றுநோய் போன்ற கொடிய நோய் ஆபத்துக்கள் அதிகரிக்கலாம். அதனால் மௌத் வாஷ் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.