பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக ஐரோப்பிய நாடுகள் சில புலம்பெயர்தல் விதிகளை எளிதாக்கிவருகின்றன.
பிரான்சின் நிலைப்பாடு
பிரான்சைப் பொருத்தவரை, புலம்பெயர்தல் விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கும் நாடு அந்நாடு. ஆனால், பணியாளர் தட்டுப்பாடு, பிரான்சையே இறங்கிவரவைத்துவிட்டது.
புதிய குடியிருப்பு அனுமதி ஒன்றை உருவாக்க திட்டம்
பிரான்சில் நிலவும் திறன்மிகுப் பணியாளர் தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக புதிய குடியிருப்பு அனுமதி ஒன்றை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
அத்துடன், சில குறிப்பிட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் எளிதில் பிரான்சில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும்வகையில் புலம்பெயர்தல் விதிகளை மாற்றவும் திட்டம் உள்ளது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin மற்றும் தொழிலாளர் துறை அமைச்சரான Olivier Dussopt ஆகிய இருவரும் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், புலம்பெயர்தல் தொடர்பிலான புதிய சட்ட வரைவு 2023 துவக்கத்தில் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்கள்.