மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் அமைகிறது மாரடைப்பு ஏற்படும் பெரும்பாலானோர் இறந்துவிடுகின்றனர்.
மாரடைப்பு ஏற்படபோவதை சில மாதங்களுக்கு முன்பே நமது உடல் சில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும் ஆனால் அதை நாம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டு விடுகிறோம்.
ஆய்வுகளின்படி மாரடைப்பு ஏற்படபோவதை 7 முக்கியமான அறிகுறிகள் உணர்த்துகின்றது.
அறிகுறிகள்
ஆய்வுகளின்படி மாரடைப்பு ஏற்படப்போகும் சில நாட்களுக்கு முன்னனர் தூக்கமின்மை, மூச்சு விடுவதில் சிரமம், செரிமான கோளாறு, பய உணர்வு, கை அல்லது கால்கள் பலவீனமடைதல், மனநிலை மாற்றங்கள் மற்றும் பசியின்மை போன்ற 7 முக்கியமான அறிகுறிகள் தென்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள்
பெண்களுக்கு மார்பு பகுதியில் ஒருவித அசௌகரிய உணர்வு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும்பொழுது நெஞ்சு வலி, நெஞ்சில் ஒருவித இறுக்கம், கனமாக உணர்தல் போன்றவை ஏற்படும். அப்படியே படிப்படியாக கை, கால்கள் பலவீனமடைய தொடங்கும் இதனால் சிலருக்கு பயம், சோர்வு அல்லது அதிக வியர்வை வெளிப்படும்.
நெஞ்சு வலி பொதுவான அறிகுறியாக கருதப்படுகிறது ஆனால் நெஞ்சு வலியுடன் சேர்த்து மூச்சு விடுவதில் சிரமம், உடல்நலம் குன்றியிருப்பதாக உணர்வது, முதுகு அல்லது தாடை பகுதியில் வலி ஏற்படுவது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
செய்ய வேண்டியவை
உடல் செயல்பாடுகளை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும், தினமும் உடற்பயிற்சி செய்து ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை கடைபிடிப்பதால் மாரடைப்பு வருவதிலிருந்து தப்பித்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.