ரொனால்டோ – மெஸ்ஸி வரிசையில் இடம் பிடிக்க காத்திருக்கும் இளம் கால்பந்து வீரர்

கால்பந்து உலக கிண்ண இறுதி போட்டியில் பிரான்ஸின் தோல்வியின் பின்னர் அந்த அணியின் இளம் வீரர் எம்பாப்வே, ரொனால்டோ – மெஸ்ஸி வரிசையில் இடம் பிடிக்க போகும் வீரர் என்கிறார்கள்.

2014 மற்றும் 2022 இல் எம்பாப்வே பிரான்ஸ் தேசிய அணிக்காக முறையே தனது 19ஆவது 23ஆவது வயதுகளில் ஆடினார்.

இளம் வயதுகளின் இயற்கையாக அமைந்த உடலியல் தன்மையால் கைகூடும் Pace மற்றும் power இனை கொண்டு எம்பாப்வே ஒரு நல்ல striker ஆக இருக்கிறரார்.

Dribbling, ability to beat a marker மற்றும் முடிவுகள் எடுப்பது போன்ற விடயங்களில், இந்த வயதுகளில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ போன்றவர்கள் கொண்டிருந்த SKILL SET க்கு அருகிலும் இல்லை எம்பாப்வே. நேற்றைய இறுதிப்போட்டியில் முதல் பாதியில் எம்பாப்வே-வின் கால்களில் பந்து பட்டதாக தெரியவில்லை.

அவர் அடித்த நேற்றைய மூன்று கோல்களும் வாழைப்பழத்தை உரித்து வாயில் வைத்த கதைதான். அதிலும் எம்பாப்வே நேற்று (18-12-2022) அடித்த மூன்று பெனாலிட்டி உதைகளில் இரண்டு, ஆன்ஜென்டினா கோல் காப்பாளர் மார்ட்டினெர்ஸ் இன் கைகளை ஆரத்தளுவியே சென்றன.

வேகம் மற்றும் சக்தி சற்றே குறைந்து இருந்தாலும் அவை தடுக்கப்பட்டு இருக்கும். Post match காட்சிகளில் எம்பாப்வே-வின் உணர்வு பெருக்கு ஏற்படுத்திய கழிவிரக்கத்தில் உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் இணைத்து ஆசுவாசப்படுகிறார்கள்.

இதனை தான் கொஞ்சம் கடும் வார்த்தைகளில் முன்னாள் அயர்லாந்து வீரர் கூறியுள்ளார்.

Damien Duff. “How good Messi is, the best version of Messi when he was 23, 24, 25 maybe, Mbappe doesn’t lace his boots”.

Recommended For You

About the Author: webeditor