தண்ணீர் குடிப்பதால் உடல் எடை குறையுமா?

தண்ணீருக்கும் எமது உடல் எடை குறைப்பிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக பல ஆய்வுகள் கூறப்படுகிறது.

இயற்கையாகவே எமது உடலில் 60% தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது இதனை வைத்து பார்க்கும்போது உடலுக்கும் தண்ணீருக்கும் எந்த அளவு நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

வளர்சிதை மாற்றம்

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது.

மற்ற வகை ஊட்டச்சத்துக்களை காட்டிலும் நமது உடலின் செல்களுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் தேவையான முதன்மையான எரிபொருளாக தண்ணீர் விளங்குகிறது.

உடலில் நீரிழப்பு

எமது உடலுக்கு போதியளவு நீர் தராவிடில் உள்ளுறுப்புகள் சோர்வடைந்து நமது உடலில் நீரிழப்பு ஏற்படும்.

சில சமயங்களில் நமது மூளை பசியையும், தாகத்தையும் குழப்பி விடுகிறது. நமக்கு அடிக்கடி பசி எடுக்கும் சமயத்தில் நாம் உணவை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக தண்ணீரை குடிக்க வேண்டும்.

எடை அதிகரிக்காது

அவ்வாறு நாம் தண்ணீரை குடிப்பதன் மூலம் தேவையற்ற உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளமாட்டோம் இதனால் உடல் எடையும் அதிகரிக்காது.

சாப்பிடுவதற்கு சில மணி துளிகள் முன்னர் நாம் தண்ணீரை குடித்தால் நாம் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் கம்மியாகும் இதனால் உடல் எடையும் சீக்கிரம் குறையும்.

எளிதில் செரிமானம்

தண்ணீர் உட்கொள்ளும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எளிதில் செரிமானம் அடைய செய்கிறது.

உடல் எடையை குறைப்பதற்கு முக்கியமாக நாம் பின்பற்ற வேண்டிய ஒன்றுதான் உடற்பயிற்சி.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்யும்போது உடலில் அதிகப்படியான நீரிழப்பு ஏற்படும்.அதனை ஈடுசெய்ய நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

அப்போது தான் உறுப்புகள் சோர்வடையாமல் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.

அதிகப்படியான கொழுப்பு

உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைப்பதிலும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அதோடு மனநிலையை சீராக வைப்பதற்கும், சிறந்த செரிமானத்திற்கும், சருமம் பளபளப்பாவதற்கும் பல நன்மைகளை தண்ணீர் வழங்குகிறது.

Recommended For You

About the Author: webeditor