பிரித்தானியாவுக்குச் செல்ல முயற்சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் மீட்புப் படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.
பிரான்ஸ் கடலோர காவல்படைக்கு சொந்தமான 02 கூடுதல் கப்பல்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பல்களை அனுப்ப திட்டம்
இந்த ஆண்டில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் பிரான்ஸ் வழியாக பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டிங்கியில் கடக்க முயன்ற 27 பேர் நீரில் மூழ்கிய சம்பவத்தினை தொடர்ந்து பிரான்ஸ் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில்,லேபரௌஸ் ஆய்வுக் கப்பல் கலேஸ் துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன், கெர்மோர்வன் ரோந்துக் கப்பல் அடுத்த சில நாட்களில் அங்கு இருக்கும் என்று பிரான்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.