உலகில் மிகவும் ஆடம்பர நகரங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் நியூயார்க்

உலகில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன.

நியூயார்க், எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நியூயார்க், சிங்கப்பூர் நகரங்கள் முதன்மை
உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன.

வீடு, போக்குவரத்து, உணவு, ஆடைகள் உள்பட 200–க்கும் மேற்பட்ட வி‌ஷயங்களுக்கு ஆகும் செலவுகள், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில், ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் உலக அளவில் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களில் சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் மற்றும் லிபியா நாட்டின் திரிபோலி ஆகியவை முதன்மை இடங்களை வகிக்கின்றதாகவும் கூறப்படுகின்றது.
Previous Post
20 வயதுடைய இளைஞனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்
Next Post

Recommended For You

About the Author: webeditor