நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கண்டிக்கப்பட்ட வனிந்து ஹசரங்க

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பல்லேகலேயில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, ​​ஐ.சி.சி நடத்தை விதிகளின் படி 1 ஐ மீறியதற்காக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு உத்தியோகபூர்வ கண்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு காட்டுவது தொடர்பான வீரர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.8ஐ ஹசரங்க மீறியது கண்டறியப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கை
இது தவிர, ஹசரங்காவின் ஒழுக்காற்றுப் பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.

இது கடந்த 24 மாத காலப்பகுதியில் நடந்த முதல் குற்றமாகும் என்று ஐசிசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுடனான போட்டியின் 26வது ஓவரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நஜிபுல்லா சத்ரானுக்கு ஆரம்பத்தில் ஆட்டமிழப்பு கொடுக்கப்பட்ட பிறகு, மீள் முறையீட்டின்போது, அந்த முடிவை தொலைக்காட்சி நடுவர் ரத்து செய்தபோது ஹசரங்க, பாரிய தொலைக்காட்சி திரையை சுட்டிக்காட்டி தனது அதிருப்தியை காட்டியுள்ளார்.

குறைந்தபட்ச அபராதம்
இந்த குற்றத்தை ஹசரங்க ஒப்புக்கொண்டதன் காரணமாக முறையான விசாரணைக்கு அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள நடுவர்கள் நிதின் மேனன் மற்றும் லிண்டன் ஹனிபால், மூன்றாவது நடுவர் ரவீந்திர விமலாசாரி மற்றும் நான்காவது நடுவர் ருசிர பள்ளியகுருகே ஆகியோர், இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.

நிலை 1 மீறல்களுக்கு உத்தியோகபூர்வ கண்டனத்தின் குறைந்தபட்ச அபராதம், ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50 சதவீதம் அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு ஒழுக்க மீறல் புள்ளிகள் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Recommended For You

About the Author: webeditor