பிரான்ஸின் தென் பகுதியில், அடையாள மோசடிக்குள்ளானதாகக் கூறப்படும் பெண்ணுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 யூரோக்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செபோரா(Séphora) என்ற பெண் Pyrénées-Orientales பகுதியில் வாழ்ந்து வருகின்றார். 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முறையாக இந்த பிரச்சினை ஆரம்பித்துள்ளது.
கொரோனா முடக்க நிலை விதிகளை மீறியதற்காக 135 யூரோ அபராதம் அவருக்கு விதிக்கப்பட்டது. எனினும் அந்த காலப்பகுதியில் அபராதம் விதிக்கப்பட்ட பகுதியில் அவர் இருக்கவில்லை.
இது ஒரு நிர்வாகப் பிழை என்று நினைத்து, அபராதத்தை எதிர்த்து போராட்டம் செய்தமையால் இரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் அதே பிரச்சினைக்காக மற்றொரு அபராதத்தைப் பெற்றார்.
Perpignan பகுதியில் விதிகளை மீறியதாக கூறப்பட்டது. அங்கு அவர் இருக்கவில்லை. சில வாரங்களுக்குப் பிறகு, அவரது ஊதியத்தில் இருந்து 375 யூரோக்களைக் கழிக்குமாறு அவரது முதலாளியிடம் கேட்கப்பட்டது, மேலும் பேர்பின்நன் நகர சபையிலிருந்து இரண்டு முறை மனு அனுப்பி வைக்கப்பட்டது.
செபோரா(Séphora)நேரில் சென்று நிலைமையை தெளிவுபடுத்துவதற்கு முடிவு செய்தார், மேலும் அவர் பிரச்சினையை தீர்க்கும் என்று நம்பினார். இருப்பினும், அவர் வந்ததும், அவரிடம் பல்வேறு தவறான செயல்களுக்காக மொத்தம் 2,625 யூரோ அபராதம் செலுத்த வேண்டும் என்று அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள வீதியில் வாகன பயன்பாட்டு தவறுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் செபோரா(Séphora)வுக்கு வாகனமே இல்லை. அத்துடன் அபராதம் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் நர்போன் -Narbonne பகுதியிலேயே வசித்து வந்துள்ளார்.
அந்த பெண் ஒரு வழக்கறிஞரைத் தொடர்புகொண்டு, அடையாள பிழையினால் இவ்வாறாறான சம்பவங்கள் நிகழ்வதாக எண்ணியவர் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அது மாத்திரமின்றி ரயில் டிக்கட் பணம் செலுத்தாமை, தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டணம் செலுத்தாமை உள்ளிட்ட தொடர் அபாராதங்கள் அவருக்கு விதிக்கப்பட்டது.
சில சந்தர்ப்பங்களில் வங்கி கணக்குகளில் இருந்தும் அபராத பணம் என ஒரு தொகை வெட்டப்பட்டிருக்கும். எனினும் அந்த அபராதங்கள் ஒன்றிற்கும் தான் தொடர்புப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த அபராத பிரச்சினைகள் எப்போது முடிவடையும் என்று தெரியாமல் நான் ஒரு உண்மையான கனவில் வாழ்கிறேன் . எனக்கு மாத்திரம் திட்டமிட்டு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றதா என தெரியவில்லை” என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.