சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரொனோ தொற்று!

உலகின் முதல் கோவிட் வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் பதிவாகியது.

அதன்பின்னர் உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தையும் உயிர் இழப்புக்களையும் கோவிட் வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதிகரிக்கும் கோவிட் தொற்று

நேற்று முன்தினம் அங்கு 29,157 பேருக்கு னோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 31,656 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 27,646 பேருக்கு அறிகுறி இல்லாத கோவிட் தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கோவிட் பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்கு உத்தரவு

சீனாவில் இதுவரை கோவிட் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கோவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 2,97,516 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவிட் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

பல மாவட்டங்களுக்கு ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor