பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட அரச பேருந்து சாலை ஊழியர்கள்

முல்லைத்தீவு மாவட்ட அரச பேருந்து சாலை ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (22.11.2022) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் முல்லைத்தீவு அரச பேருந்து சாலையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான அரசபேருந்து சேவை முற்றாக தடைப்பட்டிருந்தது.

கோரிக்கைகள்
உரிய திகதியில் வேதனம் வழங்கப்படவேண்டும், பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டும், சாலைக்குரிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நிறைவுசெய்யப்படாமை உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வடபிராந்திய அரச போக்குவரத்து செயலாற்று முகாமையாளர், பொறியில் முகாமையாளர், நிதிமுகாமையாளர் ஆகியோர் சாலைக்கு வருகைதந்து போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினையும் ஊழியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றி தருவதாகவும் வாக்குறுதியளித்துள்ளதை தொடர்ந்து நேற்று பி.பகல் 4.00 மணியளவில் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor