கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தவறான திட்டம் காரணமாக கடும் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவுக்கு அதிகளவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு வணிக அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானிய வணிக அமைப்பு இயக்குனர் டோனி டேங்கர் பர்மிங்காமில் நடைபெற்ற பிரித்தானிய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பணவீக்கம் அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், மந்த நிலையை எதிர்த்துப் போராடுவதற்கும் தங்களுக்குத் தெரியும் என்றும், இருப்பினும் இரண்டையும் ஒன்றாக எதிர்த்துப் போராடுவது தங்களுக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.