இன்று உலகில் செல்போன் இல்லாத நபர்களே கிடையாது. அவ்வாறு செல்போன் பாவிப்பவர்கள் ஆன்ட்ராய்டு போன்களை பாவிப்பதையே தான் அதிகமாக விரும்புகின்றனர்.
மேலும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களிடம் எளிதாக தகவலை பரிமாற்றவும், பேசவும், நேரடியாக காணொளி மூலம் பேசுவதற்கு வாட்ஸ்அப்பினை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதில் பல நன்மைகள் இருந்து வந்தாலும் தற்போது சில மாற்றங்களை இதில் செய்யுமாறு சைபர் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளுக்கு நாள் வாட்ஸ்அப் பாவனையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஹேக்கர்கள் மூலம் பல குற்றங்களும் அரங்கேறவும் செய்கின்றது.
பலரும் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருவதால் ஒரே நேரத்தில் பல நபர்களை குறிவைத்து மோசடி நடப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
நமது வாட்ஸ்அப் கணக்கில் சிறிய தவறு ஏதேனும் நடந்துவிட்டால் ஆன்லைன் மோசடி செய்பவர்கள் மிக சுலபமாக ஏமாற்ற வாய்ப்பு உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பாதுகாப்ப செயலி என்ன?
வாட்ஸ் அப் பயன்படுத்தும் நாம் கூடுதல் பாதுகாப்பாக வாட்ஸ்அப் செட்டிங்கில் சிறு மாற்றம் செய்ய வேண்டும். இவை உங்களது போனில் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆம் உங்களது வாட்ஸ் அப்பில் two step verification என்ற செட்டிங் செயலில் உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
எவ்வாறு செய்ய வேண்டும்?
வாட்ஸ் அப்பை ஓபன் செய்த பின்பு அக்கவுண்டில் டேப் செய்து, பின்பு tow step verification என்ற ஆப்ஷனுக்குள் செல்ல வே்டும்.
பின்பு இதனை எனேபிள் கொடுத்துவிட்டு தங்களுக்கு விருப்பமான 6 இலக்க பின் நம்பரை செலுத்தி உறுதிபடுத்தவும்.
மின்னஞ்சல் கொடுக்க விருப்பம் என்றால் அதில் உங்களது மின்னஞ்சலை பதிவிடவும். அவ்வாறு விருப்பமில்லை எனில் மின்னஞ்சல் அருகில் இருக்கும் தவிர் என்பதை டேப் செய்துவிட்டு, பின்பு நெக்ஸ்ட் என்பதற்குள் செல்ல வேண்டும்.
இறுதியாக, நீங்கள் மின்னஞ்சல் முகவரி செலுத்தியிருந்தால் அதனை உறுதிசெய்து சேமி அல்லது முடிந்தது என்பதை கிளிக் செய்யவும்.
இந்த செயல்முறையினால் ஹேக்கர்கள் உங்களது மொபைல் தவறாக வழிக்கு கொண்டு செல்லாமல் பாதுகாப்பதுடன், பல தவறுகள் நடக்காமலும் இவை உதவியாக இருக்கின்றது.
Screen Lock-ஐ மாற்றவும்
குறித்த two step verificationஐ தவிர சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் ஸ்கிரீன் லாக்கை கான்ஃபிகர் செய்யவும் கோரியுள்ளனர்.
ஸ்மார்ட் போனில் அவ்வப்போது அப்டேட் கேட்கும் தருணத்தில் உங்களது ஸ்கிரீன் லாக்கையும் மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது என்று கூறப்படுகின்றது.