உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.

சாதாரணமாகவே திராட்சை பழம் மிகவும் சத்தானது.

அவற்றை உலர்த்தும் செயல்முறை திராட்சையை மேலும் அதிக ஊட்டச்சத்து மற்றும் கலோரி மிக்கதாகக்குகிறது.

பண்டைய காலத்தில் ஃபுட் பாய்ஸனிற்கு சிகிச்சை அளிக்க உலர் திராட்சை தான் எமது மூதாதையர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

இத்தனை அதிசயம் கொண்ட உலர் திராட்சையை யார் எப்படி சாப்பிட்டால் பலன் அதிகம் என்று பார்க்கலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சை சாப்பிட வேண்டும்?
பெண்கள் ஒரு சிறிய கப் உலர் திராட்சையை (15-20 கிஸ்மிஷ்) உட்கொள்ளலாம்.

அதே நேரத்தில் ஆண்கள் ஒரு நாளைக்கு 1.5 கப் வரை உட்கொள்ளலாம்.

இரவில் ஊறவைத்து சாப்பிட்டால் பலன் அதிகம்
உலர் திராட்சையை பச்சையாக சாப்பிடுவதை விட இரவு முழுதும் ஊறவைத்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.

15-20 உலர் திராட்சைகளை ஒரே இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அவற்றைச் சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்கலாம்.

ஊர வைத்து சாப்பிடுவதால் தேவையற்ற தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தண்ணீரில் கரைந்து, உடலில் விரைவாக உறிஞ்சப்படுவதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மட்டுமே வைத்திருக்கும்.

ஊறவைத்த திராட்சையை நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரிக்கிறது.

இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிப்பதாக கூறப்படுகின்றது. எனவே உலர் திராட்ச்சையை ஊர வைத்து சாப்பிடுவது ஆரோக்கியமான ஒன்று.

இவ்வாளவு நன்மைகளா?

உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.

உலர் திராட்சை சாப்பிடுவதால் இதய நோய்களினால் ஏற்படும் அபாயம் குறையுமாம்

இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

உலர் திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும்.

புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து உலர் திராட்சை நம்மை பாதுகாக்கலாம்.

கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் திராட்சைகள் உதவுகின்றன.

உலர் திராட்சையில் காப்பர் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. எனவே தினமும் உலர் திராட்சை சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த சோகை பிரச்னை குணமாகும்.

மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.

தினசரி இந்த உலர் பழத்தை சாப்பிடுவதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor